திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 17 அக்டோபர் 2022 (16:50 IST)

13 வயது மாணவனுடன் திருமணம், முதலிரவு..?! ஆசிரியர் செய்த அதிர்ச்சி சம்பவம்!

பஞ்சாபில் 13 வயது பள்ளி மாணவனை ஆசிரியரே திருமணம் செய்து குடித்தனம் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள பஸ்தி பாவா கேல் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்துள்ளான். அப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தவர் மங்லிங்.

மங்லிங்கிற்கு நீண்ட காலமாக திருமணம் நடைபெறாமல் இருந்து வந்துள்ளது. அவருக்கு திருமண தோஷம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அதை கழிக்க சிறுவன் ஒருவனை முதலில் திருமணம் செய்து தோஷம் கழிக்க வேண்டும் என சிலர் கூறியுள்ளனர்.


இதனால் சிறுவனின் பெற்றோரிடம் அவனுக்கு இலவசமாக ட்யூசன் எடுப்பதாக கூறி அழைத்து சென்றுள்ளார் மங்லிங். பின்னர் வீட்டில் வைத்து சிறுவனை தாலிக்கட்ட செய்த மங்லிங், சிறுவனுடன் தேனிலவு வரை கொண்டாடியுள்ளார்.

பின்னர் தோஷம் போக்குவதற்கான சம்பிரதாயங்களை செய்துள்ளார். 6 நாட்கள் கழித்து வீட்டிற்கு சென்ற சிறுவன் நடந்தது அனைத்தையும் தனது பெற்றோரிடம் கூறியுள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited By: Prasanth.K