திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 20 அக்டோபர் 2022 (15:44 IST)

இன்று முதல் மெட்ரோ ரயில் கூடுதல் சேவை - சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு

metro
இன்று முதல் 3 நாட்களுக்கு சென்னை மெட்ரோ ரயில் சேவை கூடுதல் நேரங்களில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்பவர்களின் வசதியை கணக்கில் கொண்டு நெரிசல் மிக்க நேரங்களில் இயக்கப்படுவது போல் 5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் என சேவை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதுவரை பீக் நேரத்தில் மட்டும் ஐந்து நிமிடம் இடைவேளை இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் இன்று முதல் காலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை 5 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
சொந்த ஊருக்கு வெளியூர் செல்லும் பொதுமக்கள் கோயம்பேடு மற்றும் சென்ட்ரல் எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு செல்ல வேண்டும் என்பதால் இந்த கூடுதல் மெட்ரோ ரயில் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran