1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Husband fired his house in UP state

சிக்கன் சமைக்க மறுத்த மனைவி.. வீட்டை கொளுத்திய கணவர்.. ரூ.3.50 லட்சம் சேதம்..!

Fire
மத்திய பிரதேசம் மாநிலத்தில் மனைவியிடம் சிக்கன் சமைக்க கணவர் சொன்னதாகவும் ஆனால் மனைவி சிக்கன் சமைக்க மறுத்து பருப்பு குழம்பு வைத்ததால் மது போதையில் ஆத்திரம் அடைந்த கணவர் வீட்டை கொளுத்தியதால் ரூபாய் 3.50 லட்சம் மதிப்புள்ள வீட்டில் உள்ள பொருட்கள் சாம்பல் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.  மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த உஜ்ஜையின் அருகே மது போதையில் வீட்டுக்கு வந்த கணவர் தனக்கு சிக்கன் குழம்பு வைக்க வேண்டும் என மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால் சிக்கன் வைக்க முடியாது என்றும் ஏற்கனவே பருப்பு சமைத்து விட்டதால் அதை சாப்பிடும் படியும் மனைவி கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் மது போதையில் மனைவியை தாக்கி வீட்டை விட்டு வெளியேற்றி வீட்டுக்கு தீ வைத்துள்ளார். இதன் காரணமாக வீட்டின் அலமாரியில் இருந்த சுமார் 3.5 லட்சம் பணம் மற்றும் நகைகள், வாஷிங் மெஷின், பிரிட்ஜ் உள்ளிட்ட இயந்திரங்கள் தீயில் சேதம் அடைந்துள்ளதாக தெரிகிறது. 
 
இதுகுறித்து கணவர் மீது மனைவி போலீசில் புகார் அளித்துள்ள நிலையில் போலீசார் இது குறித்து நடவ டிக்கை எடுத்து வருகின்றனர். சிக்கன் சமைக்க முடியாது என்று மனைவி கூறியதால் 3.00,000 ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் சேதம் ஆகி உள்ளது அந்த பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
போதை என்பது மனிதனின் மூளையையே மழுங்க செய்துவிடும் என்றும் போதையில் இருந்து எப்போது மனிதர்கள் விடுபடுகிறார்களோ அப்போதுதான் இந்த உலகம் முன்னேறும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
வானில் வியாழன், வெள்ளி 'இணையும்' நிகழ்வை தமிழ்நாட்டில் எப்படிப் பார்க்கலாம்?