1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Home Minister's Statement on Kashmir's Special Status

ராகுலின் 4வது தலைமுறையினர் வந்தாலும், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்காது: அமித்ஷா

Kashmir
ராகுல் காந்தியின் நான்காவது தலைமுறை வந்தாலும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்காது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியபோது, தேர்தல் பிரச்சாரங்களின் போது ராகுல் காந்தி பயன்படுத்திய அரசியல் சாசன புத்தகம் உண்மை கிடையாது என்றும், அது ஒரு போலி என்றும் அவர் தெரிவித்தார்.

பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு எதிராக காங்கிரஸ் உள்ளது என்றும், சிறுபான்மையினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும், காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு பகுதி என்றும், ராகுல் காந்தியின் நான்காவது தலைமுறையும் கூட காஷ்மீர் சிறப்பு சட்டத்தை கொண்டு வர முடியாது என்றும் அவர் பேசினார்.

மதரீதியிலான இட ஒதுக்கீட்டை பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.


Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
ஆந்திராவில் கடல் வழி விமான சேவை: வெள்ளோட்டம் நிகழ்ச்சியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு..!