1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 7 நவம்பர் 2024 (16:40 IST)

சென்னை திரும்புகிறார் அண்ணாமலை.. வந்த மறுநாளே சென்னை, கோவையில் கட்சி கூட்டம்..!

மேற்படிப்பு படிப்பதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை லண்டன் சென்று இருந்த நிலையில், நவம்பர் 28ஆம் தேதி அவர் சென்னை திரும்ப இருப்பதாகவும், வந்த மறுநாள் அவர் சென்னை மற்றும் கோவையில் கட்சி நிகழ்வு கூட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசியலில் கலக்கி கொண்டு இருந்தார். அவரது வருகைக்குப் பின்னர் தான் பாஜக என்ற கட்சி இருப்பது பல இடங்களுக்கு தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், அதே நேரத்தில் அவரது தலைமையில் சமீபத்தில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொண்ட போது, ஒரு தொகுதியில் கூட பாஜக கூட்டணி வெற்றி பெறவில்லை என்பது ஒரு பின்னடைவாக இருந்தாலும், 2026 ஆம் ஆண்டு பாஜகவுக்கு ஒரு குறிப்பிட்ட சில தொகுதிகளை கிடைக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மேல் படிப்பு படிப்பதற்காக லண்டன் சென்ற அண்ணாமலை, நவம்பர் 28ஆம் தேதி தமிழகம் திரும்புகிறார் என்றும், நவம்பர் 29ஆம் தேதி சென்னை பாஜக அலுவலகத்தில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், நவம்பர் 30ஆம் தேதி கோவை நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்பார் என பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Edited by Siva