திங்கள், 16 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 24 டிசம்பர் 2025 (14:43 IST)

20 ஆண்டுகளுக்கு பின் இணைந்த பால் தாக்கரே குடும்பம்.. மகாராஷ்டிராவில் திருப்பம் ஏற்படுமா?

20 ஆண்டுகளுக்கு பின் இணைந்த பால் தாக்கரே குடும்பம்.. மகாராஷ்டிராவில் திருப்பம் ஏற்படுமா?
மகாராஷ்டிர அரசியலில் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு வரலாற்று சிறப்புமிக்க திருப்பம் ஏற்பட்டுள்ளது. சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோர் மீண்டும் கைகோர்த்துள்ளனர். 
 
வரும் ஜனவரி 15-ஆம் தேதி நடைபெறவுள்ள மகாராஷ்டிர உள்ளாட்சி தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த 2006-ஆம் ஆண்டு சிவசேனையிலிருந்து வெளியேறி ராஜ் தாக்கரே தனிக்கட்சி தொடங்கிய நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இந்த உடன்பாடு அம்மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 
 
மும்பையில் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்ததுடன், இரு குடும்பத்தினரும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். கடந்த ஜூலை மாதம் ஹிந்தி திணிப்புக்கு எதிராக இவர்கள் இணைந்து நடத்திய போராட்டமே இந்த மெகா கூட்டணிக்கு அடித்தளமாக அமைந்தது. 
 
பால் தாக்கரேவின் வாரிசுகள் மீண்டும் ஒன்றிணைந்திருப்பது, தற்போதைய ஆளும் தரப்பிற்கு பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran