தொடர்புடைய செய்திகள்
- ஜிம்மில் உடற்பயிற்சி செய்த ஓட்டல் உரிமையாளர் திடீர் மரணம்!
- கோவில் கோபுரத்தில் மோதி விபத்தான விமானம்! – மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி!
- அவங்க மேல சோதனை போடுறதுல என்ன தப்பு? - சீன பயணிகள் சோதனைக்கு WHO ஆதரவு!
- வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த 124 பயணிகளுக்கு கொரொனா மற்றும் 40 புதிய வகை தொற்று!- மத்திய சுகாதார அமைச்சகம்
- நடுவழியில் திடீரென நின்ற திருச்சி எக்ஸ்பிரஸ்: பயணிகள் அவதி!
நடுவானில் பயணிக்கு மாரடைப்பு: உயிரை மீட்ட மருத்துவர்!
நடுவானில் விமான பயணி ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அந்த விமானத்தில் பயணம் செய்த மருத்துவர் ஒருவர் அவரது உயிரை காப்பாற்றியுள்ளார்.
பிரிட்டனில் இருந்து பெங்களூருக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு திடீரென நடுவானில் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அந்த நபர் உயிருக்கு போராடினார்.
இந்த நிலையில் அவரது உயிரை மருத்துவர் விஸ்வராஜ் என்பவர் அதே விமானத்தில் பயணம் செய்த நிலையில் காப்பாற்றியுள்ளார். 43 வயது மதிக்கத்தக்க அந்த நபருக்கு முதலில் மாரடைப்பு வந்ததும் விஸ்வராஜ் முதல் உதவி செய்து அவரை காப்பாற்றினார்.
அதன்பின்னர் சிறிது நேரத்தில் மீண்டும் அதே நபருக்கு இரண்டாவது முறையாக மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து 5 மணி நேரம் போராடி அவரை அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளார். இதனை அடுத்து அந்த மருத்துவருக்கு சகபயணிகள் பாராட்டு தெரிவித்தனர்
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
