1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 6 ஜனவரி 2023 (18:38 IST)

ஜிம்மில் உடற்பயிற்சி செய்த ஓட்டல் உரிமையாளர் திடீர் மரணம்!

maharashtra
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரியில் வசித்து வரும் ஒரு ஹோட்டல் உரிமையாளர்  ஜிம்மில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 மத்திய பிரதேச மாநிலம் இந்தூரியில் வசித்து வரும் ஒரு ஹோட்டல் உரிமையாளர்  பிரதீப் ரகுவன்ஷி, லசுடியா என்ற பகுதியில் இயங்கி வரும் கோல்டன் ஜிமிற்குச் சென்றிருந்தார்.

இவர் தினமும் இந்த ஜிம்மிற்கு வந்து உடற்பயிற்சி செய்வது வரும் நிலையில், இன்றைய உடற்பயிற்சியின் போது, திடீரென்று அவர் கீழே விழுந்துள்ளார்.

அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவகர்கள் அவர் உயிரிழந்ததாகக் கூறியுள்ளனர்.

இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்த நிலையில், பிரதீப்பிற்கு மாரடைப்பு ஏற்பட்டு, அவர் கீழே விழுந்து மயக்கம் அடைந்துள்ளாதாகவும், அதன் பிறகு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் இதேபோல்  உடற்பயிற்சி செய்யும்போது மாரடைப்பால் உயிரிழந்து குறிப்பிடத்தக்கது.