1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Halwa program cancelled before budget

கொரோனா காரணமாக அல்வா செய்யப்படாது..! – மத்திய அரசு முடிவு!

National
மத்திய அரசின் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அல்வா செய்யும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் 2022 – 23க்கான ஆண்டு பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. கொரோனா பாதிப்புகள் காரணமாக தொழில்துறைகள் முடங்கியுள்ள நிலையில் பட்ஜெட்டில் சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் தயாரிப்பு பணிகள் முடிந்து பட்ஜெட்டை அச்சிடும் பணி தொடங்கும்போது அல்வா செய்வது வழக்கமாக உள்ளது. நிதியமைச்சர் மற்றும் இணை அமைச்சர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்விற்கு பிறகு பட்ஜெட் அச்சிடப்படும். இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா காரணமாக அல்வா கிண்டும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டிற்கு முன்னதாக அல்வா கிண்டுவது ரத்து செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் தடவையாகும்.
அடுத்த கட்டுரையில்
பாகிஸ்தான் ராணுவம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 10 பேர் பலி!