1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 27 ஜனவரி 2022 (11:10 IST)

தந்தையின் பாசத்திற்கு இதைவிட உதாரணம் உண்டா? – வைரலாகும் புகைப்படம்!

அறுவை சிகிச்சை செய்த தன் மகளை போன்றே தலையை மாற்றிக் கொண்ட தந்தையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எத்தனை நாடுகள், மொழிகள், கலாச்சாரம் என மனிதர்கள் பிரிந்து இருந்தாலும் தந்தை, மகளுக்கு இடையேயான பாசம் என்பது ஒன்று போலவே இருக்கிறது. ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை தந்தை, மகள் இடையேயான பாசத்தை முன்னிறுத்தி எடுக்கப்படும் படங்களும் ஆண்டுதோறும் வெளியாகின்றன.

தற்போது தந்தை, மகள் இடையேயான பாசத்திற்கு உதாரணம் காட்டும் விதமாக புகைப்படம் இன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அந்த புகைப்படம் எங்கே எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் இல்லை. அதில் தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தையல் போடப்பட்ட தன் மகளை போலவே தந்தையும் தலையை மாற்றிக் கொண்டுள்ளார். அவர் அவரது குழந்தையுடன் இருக்கும் அந்த புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.