செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 27 ஜனவரி 2022 (08:47 IST)

தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றி மரியாதை செய்த அமைச்சர்: பெரும் பரபரப்பு

தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றி மரியாதை செய்த அமைச்சர்: பெரும் பரபரப்பு
கேரளாவில் அமைச்சர் ஒருவர் குடியரசு தினத்தில் தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 
 
நேற்று இந்தியா முழுவதும் 73 ஆவது குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் கேரளாவில் உள்ள துறைமுகம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சராக அகமது தேவர்கோயில் என்பவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்
 
அப்போது தேசியக்கொடி தலைகீழாக பறந்தது. இதனை அமைச்சர் மற்றும் அங்கிருந்த அதிகாரிகள் உடனடியாக பார்த்தாலும் அதனை கீழே இறக்கி மீண்டும் சரியாக தேசியகொடியை ஏற்ற வில்லை என்று கூறப்படுகிறது
 
தேசிய கொடியை தலைகீழாக ஒரு அமைச்சரே தலைகீழாக ஏற்றி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது