திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 31 ஜூலை 2020 (07:24 IST)

40 ஆண்டுகளுக்கு பின் சகுந்தலாதேவிக்கு வழங்கப்பட்ட கின்னஸ் சான்றிதழ்: நடிகையின் முயற்சியால் கிடைத்தது!

சகுந்தலாதேவிக்கு வழங்கப்பட்ட கின்னஸ் சான்றிதழ்:
கணித மேதை சகுந்தலா தேவி அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் 40 ஆண்டுகளுக்கு பின் தற்போது தான் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
உலகிலேயே மிகவும் வேகமாக கணக்கு செய்யும் திறமை கொண்ட சகுந்தலா தேவிக்கு கடந்த 1980 ஆம் ஆண்டு கின்னஸ் சாதனை அறிவிக்கப்பட்டது. 1980ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் தேதி லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பார்வையாளர்கள் கொடுத்த இரண்டு 13 இலக்க எண்களை சகுந்தலாதேவி 28 விநாடிகளில் விடை அளித்து அனைவரையும் அசத்தினார் 
 
இதனை அடுத்து இது உலக சாதனையாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் கணித மேதை சகுந்தலா தேவிக்கு கடந்த 40 ஆண்டுகளாக இதற்கான சான்றிதழ் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்த நடிகை வித்யாபாலன் சமீபத்தில் லண்டனில் படப்பிடிப்புக்காக சென்றபோது இதுகுறித்து கின்னஸ் நிறுவனத்திடம் பேசினார்
 
அவருடைய முயற்சியின் அடிப்படையில் தற்போது சகுந்தலா தேவியின் மகளுக்கு கின்னஸ் சாதனை வழங்கப்பட்டு உள்ளது. நாற்பது ஆண்டுகள் கழித்து கணித மேதை சகுந்தலாதேவிக்கான கின்னஸ் சாதனை சான்றிதழ் தற்போது வழங்கப்பட்டுள்ளதற்கு நடிகை வித்யாபாலன் எடுத்த முயற்சியை காரணம் என்று கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’சகுந்தலா தேவி’ என்ற திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது