வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 26 பிப்ரவரி 2020 (13:57 IST)

ஓளிமயமான எதிர்காலத்துக்கு வாழ்த்துகள் – இறப்புச்சான்றிதழில் இப்படியா எழுதுவது !

உத்தர பிரதேச மாநிலத்தில் இறப்புச் சான்றிதழில் கிராமத் தலைவர் ஒருவர் வாசக்ம எழுதி கையெழுத்து இட்டது சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள சிர்வாரியாக கிராமத்தைச் சேர்ந்த அஸோஹா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி சங்கர் என்ற முதியவர் கடந்த மாதம் 22 ஆம் தேதி இறந்துள்ளார்.

இதையடுத்து அவரின் இறப்புச் சான்றிதழ் வேண்டி அவரது மகன் கிராமத் தலைவரிடம் சென்றுள்ளார். அப்போது அந்த விண்னப்பத்தில் ‘ஒளிமயமான எதிர்காலம் அமைய வாழ்த்துகள்’ என அந்த தலைவர் எழுதி அதன் கீழ் கையெழுத்திட்டுள்ளார்.

அந்த கடிதம் சமூக வலைதளங்களில் பரவ இப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.