1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 24 ஜூலை 2020 (21:28 IST)

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை: சான்றிதழ் பதிவேற்ற செய்ய அவகாசம் நீட்டிப்பு

சமீபத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில் பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு மற்றும் கலை அறிவியல் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் பதிவு ஆகியவை தொடங்கிவிட்டது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் கலை அறிவியல் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் பதிவு தொடங்கவுள்ள நிலையில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர 38 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இணைய வழியில் www.tngasa.in- என்ற இணையதளத்தில் விண்ணப்பப்பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய ஜூலை 25 முதல் ஆக.5 வரை என்பதற்கு பதிலாக ஆக.1 முதல் ஆக.10 வரை அவகாசம் அளிக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்துள்ளார். மேலும் http://tngasa.in  என்ற இணையதளத்தில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.