1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 20 பிப்ரவரி 2020 (22:15 IST)

யூடியூபில் வெளியிட திட்டம்: திரெளபதி இயக்குனரின் அதிரடியால் பரபரப்பு

யூடியூபில் வெளியிட திட்டம்
திரெளபதி படத்தை இயக்கியுள்ள ஜி.மோகன் இந்த படத்தை வரும் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளார். இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யுஏ சான்றிதழ் கொடுத்ததோடு 14 இடங்களில் வசனத்தையும் மியூட் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சென்சார் வெட்டிய காட்சிகளை யூட்யூபில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் இயக்குனர் ஜி மோகன் குறிப்பிட்டுள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் சர்ச்சைக்குரிய காட்சிகள் என்பதால் யூடியூபில் இந்த காட்சிகள் வெளிவந்தால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது
 
இந்த நிலையில் திரெளபதி திரைப்படத்தை வெளியிட விடாமல் தடுக்க சதி நடந்து கொண்டிருப்பதாகவும், ஆனால் சதிகளை முறியடித்து திட்டமிட்டபடி திரெளபதி ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் திரெளபதி திரையிடும் தியேட்டர்களில் பிரச்சனை வரலாம் என எதிர்பார்க்கப்படுவதால் சர்ச்சைக்குரிய சில பகுதிகளில் மட்டும் இந்த படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்கவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.