ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 2 ஜூலை 2019 (19:44 IST)

அண்ணன் மகளை மிரட்டி பலாத்காரம் செய்த சித்தப்பா: கோவாவில் நடந்த துயர சம்பவம்

கோவாவில் தனது அண்ணன் மகளையே மிரட்டி பலாத்காரம் செய்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கோவாவில் துணிக்கடை வைத்து நடத்திவரும் நபர் அப்துல் ரசாக். இவர் தனது மனைவியுடனும், 17 வயது மகளுடனும் வசித்து வருகிறார். இவருக்கு வியாபார ரீதியான உதவிக்கு தன்னுடைய தம்பியான முகமது ரஃபீக்கை நியமனம் செய்தார்.

31 வயதான முகமது ரஃபீக் தன்னுடைய அண்ணனின் இல்லத்திலேயே தங்கியிருந்தார். இந்நிலையில் தன்னுடைய அண்ணனின் 17 வயது மகளுடன் பழகி வந்துள்ளார் ரஃபீக்.

வீட்டில் யாரும் இல்லாத நிலையில் 17 வயது சிறுமியை வற்புறுத்தி பலாத்காரம் செய்துள்ளார். இதனை வேறு யாரிடமும் கூறக்கூடாது என்று சிறுமியை மிரட்டியும் உள்ளார்.

இதன் பிறகு சிறுமியின் நடவடிக்கையில் மாற்றத்தை அறிந்த பெற்றோர்கள் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதனை அறிந்து அதிர்ந்த பெற்றோர்கள், சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது ரஃபீக் சிறுனியை பலாத்காரம் செய்த விஷயம் தெரியவந்தது. பின்பு உடனடியாக காவல் நிலையத்திற்குச் சென்ற பெற்றோர்கள் முகமது ரஃபீக்கை குறித்து புகார் அளித்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் ரஃபிக்கை கோவா போலீஸார் கைது செய்தது. தனது அண்ணன் மகளையே மிரட்டி கற்பழித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.