வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 16 ஜனவரி 2024 (08:43 IST)

அயோத்தி ராமர் கோவிலில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவது எப்போது? முக்கிய தகவல்..!

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட பிரமாண்டமான ராமர் கோயிலில் ஜனவரி 23ம் தேதி முதல் பொதுமக்கள் தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட பிரமாண்டமான ராமர் கோயில்  ஜனவரி 22ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது.  இதில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
 
இந்த நிலையில் குடமுழுக்கு விழா முடிந்த மறுநாள் ஜனவரி 23ம் தேதி முதல் பொதுமக்கள் ராமர் கோயிலுக்குள் சென்று ஸ்ரீ ராமரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும், தரிசனத்துக்கு வரும் அனைவரும் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும், கோயிலுக்குள் செல்லும் போது அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

 
அயோத்தி ராமர் கோயில் தரிசன நேரம் தினசரி  காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva