வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 16 ஜனவரி 2024 (07:23 IST)

அயோத்தி ராமர் கோயில் அருகே வீடுகட்ட இடம் வாங்கிய அமிதாப் பச்சன்!

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் வரும் 22ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் அதற்கான அழைப்பிதழ்கள் நாடு முழுவதும் உள்ள பிரபலங்களுக்கு அனுப்பப் படுகின்றன.

இதில் பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது ராமர் கோயிலில் இருந்து 15 நிமிட பயண தூரத்தில் உள்ள வீட்டு மனை ஒன்றை அவர் 14 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளாராம். அங்கு 10000 சதுர அடியில் ஒரு பிரம்மாண்ட வீடு ஒன்றையும் கட்ட உள்ளதாக சொல்லப்படுகிறது.