வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 16 ஜனவரி 2024 (08:43 IST)

அயோத்திக்கு ஒட்டுமொத்த காங்கிரஸும் செல்லும்: காங்கிரஸ் எம்பி ஆவேசம்..!

ramar temple
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு அழைப்பிதழ் கொடுக்க பாஜகவினர் யார் என்று கேள்வி எழுப்பிய காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்கள் அயோத்தியை நோக்கி செல்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.
 
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் வரும் ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில்  பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் திரையுலக பிரமுகர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



ஆனால் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் பிரமுகர்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர்  மற்றும் காங்கிரஸ் கட்சியின் எம் பி பிரமோத் திவாரி என்பவர் செய்தியாளர்களிடம் பேசியபோது அயோத்தி ராமர் கோவிலுக்கு அழைப்பிதழ் கொடுக்க பாஜகவினர் யார்? அயோத்தி எங்களுக்கு நம்பிக்கை கூறிய விஷயம், அழைப்பிதழ் இல்லாமல் ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்கள் அயோத்தி செல்வார்கள் என்று கூறியுள்ளார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva