வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 15 ஜனவரி 2024 (15:13 IST)

ராமர் கோவில் திறப்பு விழா: 700 பிரேத பரிசோதனை செய்த பெண்ணுக்கு அழைப்பு..!

ramar temple
ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், திரை உலக பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வரும் நிலையில் சாதனைகள் செய்த சிலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. 
 
அந்த வகையில் சத்தீஷ்கர் மாநிலத்தைச் சேர்ந்த  ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 18 ஆண்டுகளாக பிரேத பரிசோதனை செய்யும்  சந்தோஷி துர்கா என்ற பெண்ணுக்கு ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. 
 
இவர் கடந்த 18 ஆண்டுகளில் 700க்கும் மேற்பட்ட பிரேத பரிசோதனைகள் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சந்தோஷி துர்கா செய்தியாளர்களிடம் பேசிய போது ’எனக்கு அழைப்பு வந்ததை பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். என் கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது. பிரதமர் மோடிக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கண்டிப்பாக நான் ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்பேன். 
 
என நகர மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி மற்றும் அமைதி கிடைக்க வேண்டும் என்று நான் ராமரிடம் பிரார்த்தனை செய்வேன் என்று கூறியுள்ளார்.
 
Edited by Siva