வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 16 ஜனவரி 2024 (08:42 IST)

அயோத்தி ராமர் கோவிலுக்கு ஒருநாள் கட்டாயம் வருவேன் என துர்கா ஸ்டாலின் கூறினாரா?

durga stalin
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு ஒரு நாள் கட்டாயம் வருவேன் என அழைப்பிதழ் கொடுக்க சென்றவர்களிடம் முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் இதில் முக்கிய பிரம்மகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்க சென்றபோது துர்கா ஸ்டாலின் அந்த அழைப்பிதழை இன்முகத்துடன் பெற்றுக் கொண்டதாகவும்   ஒரு நாள் கண்டிப்பாக அயோத்தி கோவிலுக்கு வருவேன் என்று அவர் கூறியதாகவும் கூறப்படுகிறது.


பாஜக அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை தேர்தலுக்காக திறக்க உள்ளதாக திமுக விமர்சனம் செய்த நிலையில் முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்கள் தேர்தல் முடிந்ததும் அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva