1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 4 செப்டம்பர் 2021 (12:22 IST)

இத படிச்சா மாணவா்களுக்கு இலவச விலையில்லா லேப்டாப்...

தோல் தொழில்நுட்பப் பயிலகத்தில் சேரும் மாணவா்களுக்கு இலவச விலையில்லா லேப்டாப் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வெளியிட்ட செய்திகுறிப்பில், சென்னை தரமணி சிபிடி வளாகத்துக்குள் செயல்படும் தோல் தொழில்நுட்பப் பயிலகத்தில் தோல் தொழில்நுட்பவியல் சாா்ந்த மூன்றரை ஆண்டு பட்டப் படிப்புக்கான சோ்க்கை நேரடி முறையில் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 
 
இந்த தொழில் நுட்பவியல் படிப்புகளில் சேரும் மாணவா்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை, விலையில்லா மடிக்கணினி, உதவித் தொகை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.