செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 10 பிப்ரவரி 2021 (10:59 IST)

துணை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு! – இன்று முதல் தொடங்குகிறது!

துணை மருத்துவ படிப்புகளான நர்சிங், பார்மா உள்ளிட்ட 17 வகை படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

துணை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடர்ந்து தாமதமாகி வந்த நிலையில் கடந்த 4ம் தேதி தரவரிச்சை பட்டியல் வெளியானது. அதை தொடர்ந்து சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில் இன்று முதல் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான மருத்துவ கலந்தாய்வு தொடங்குகிறது. 4 சுற்றுகளாக ஆன்லைன் மூலமாக மட்டுமே நடைபெறும் இந்த கலந்தாய்வு வருகிற பிப்ரவரி 24 வரைக்கும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.