1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 26 ஜூலை 2021 (12:01 IST)

கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதற்கான இணைதளங்கள் முடக்கம்

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதற்கான இணைதளங்கள் செயல்படவில்லை என புகார். 

 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக +2 மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படாத நிலையில் அனைவருக்கும் ஆல்பாஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் 8,16,473 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். பள்ளிக்கு வராத 1,656 மாணவர்கள் தேர்வு எழுதாதவர்கள் என கணக்கிடப்பட்டுள்ளனர். மேலும் +2 மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்பட்டது.  
 
இந்நிலையில் பொறியியல் மற்றும் பி.டெக் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று முதல் அதாவது ஜூலை 26 முதல் ஆகஸ்ட்  24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை முன்னதாக அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு இன்று முதல் துவங்கியது. பொறியியல் படிப்புகளில் சேர www.tneaonline.org என்ற இணைய தளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. 
 
தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதற்கான இணைதளங்கள் செயல்படவில்லை என கூறப்படுகிறது. www.tngasa.org. www.tngasa.in செயல்படாததால் விண்ணப்பிக்க முடியாமல் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.