திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 16 ஜனவரி 2019 (07:55 IST)

பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் முதலமைச்சர்: சிக்கலில் மோடி?

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மோடியின் அதிருப்தியாளர்கள் பலர் பாஜகவில் இருந்து விலகி வருகின்றனர். அதேபோல் பாஜகவுடன் கூட்டணி வைத்த ஒருசில கட்சிகளும் விலகி வருகின்றன. இதனால் பிரதமர் மோடிக்கும் பாஜகவிற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று அருணாச்சல பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜிகாங் அபாங் பாஜகவில் இருந்து விலகியுள்ளார். கடந்த 1980 முதல் 1999 வரையும் அதன் பின்னர் 2003 முதல் 2007ஆம் ஆண்டு வரையிலும் இவர் அருணாச்சல பிரதேசத்தின் முதல்வராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கொள்கைகளை தற்போதைய பாஜக கடைபிடிக்கவில்லை என்றும், அதனால் பாஜகவில் இருந்து விலகுவதாகவும் ஜிகாங் அபாங் தனது விலகலுக்கான காரணத்தை தெரிவித்துள்ளார். ஜிகாங் அபாங் விலகலால் அருணாச்சல பிரதேசத்தில் பாஜக பலவீனமாகும் என கூறப்படுகிறது. பாஜகவில் இருந்து விலகியுள்ள ஜிகாங் அபாங் தனிக்கட்சி தொடங்குவாரா? அல்லது காங்கிரஸ் கட்சியில் சேருவாரா? என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை