1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. wife killed husband and bried for illegal affair

கணவரை கொன்று புதைத்து காதலுடன் ஜாலி!. வசமாக சிக்கிய பெண்!...

illegal affair
தற்போது நாடு முழுவதும் கள்ளக்காதல் அதிகரித்துவிட்டது. அதுவும் கள்ளக்காதலனுக்காக கணவன் மற்றும் குழந்தைகளையே கொலை செய்யும் அளவுக்கு பல பெண்கள் துணிந்து விட்டனர். இது தொடர்பான பல செய்திகளையும் நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

பத்து மாதங்கள் பெற்றெடுத்த தனது குழந்தைகளை கள்ளக்காதலனுக்காக பல பெண்களும் கொலை செய்யும் சம்பவம் செய்திகளாக வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய செய்து வருகிறது. ஒரு பக்கம் கள்ளக்காதலுடன் சேர்ந்து பெண்களே தனது கணவனை கொலை செய்த சம்பவமும் இந்தியாவில் பல மாநிலங்களிலும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்தான், ஹைதராபாத்தில் கணவனை கொலை செய்து புதைத்து விட்டு காதலனுடன் சுற்றித்திரிந்த பெண் 8 மாதங்களுக்கு பிறகு காவல்துறையிடம் சிக்கியிருக்கிறார்.

ஹைதராபாத்தை சேர்ந்த சத்தியவதி(40) என்கிற பெண் கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவரை கொன்று அவரது உடலை மகாராஷ்டிராவில் புதைத்து விட்டார். அதன்பின் காவல் நிலையத்திற்கு சென்று கணவனை காணவில்லை என புகார் அளித்தார். காவல் துறையும் அவரது கணவரை தேடிவந்தது. ஆனால் சத்தியவதி அவரின் காதலனுடன் ஊர் சுற்றி வந்ததை கண்காணித்த போலீசார் சந்தேகமடைந்து சத்யவதியிடம் நடத்திய விசாரணையில் தற்போது உண்மை வெளியே தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து சத்தியவதியை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.
About Writer
பாலகிருஷ்ணன்