1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Farmer died in BJP meeting

பாஜக கூட்டத்தில் மரணமடைந்த விவசாயி – ஆனாலும் தொடர்ந்து நடந்த கூட்டம்!

பாஜக
மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த பாஜக பொதுக்குழுவில் கலந்து கொண்ட விவசாயி ஒருவர் மாரடைப்பால் பலியானார்.

மத்திய பிரதேசத்தில் உள்ள காண்ட்வா என்ற பகுதியில் பாஜக எம்பி ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள வந்திருந்த முதியவர் ஒருவர் அங்கேயே மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் விவசாயி இறந்தபின்னரும் பாஜக தலைவர்கள் தொடர்ந்து உரையாற்றியுள்ளனர். இதுதான் பாஜகவின் மனநிலை என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
ஐரோப்பாவை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா இரண்டாவது அலை! – நிபுணர் குழு எச்சரிக்கை!