திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (16:05 IST)

திருப்பதியில் முக அடையாளத்தை கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம்: மார்ச் 1 முதல் அமல்..!

tirupathi
திருப்பதியில் முக அடையாளம் மூலம் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் மார்ச் ஒன்றாம் தேதி முதல் சோதனை முறையில் அமல் செய்யப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிலர் இடைத்தரகர்கள் மூலம் தங்குவதற்கு அறைகள் பெறுவதும் லட்டு பிரசாதம் வாங்கி செல்வதும் ஆன செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. 
 
இந்த முறைகேடுகளை தடுப்பதற்காக முக அடையாளத்தை கண்டுபிடிக்கும் தொழில்நுடத்தை பயன்படுத்த திருமலை திருப்பதி தேவஸ்தான முடிவு செய்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் போலியாக அறைகளை தங்குவதற்கான டிக்கெட் பெற்று இருந்தால் அதை இந்த தொழில்நுட்பம் காட்டி கொடுத்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மார்ச் ஒன்றாம் தேதி முதல் இந்த தொழில்நுட்பம் சோதனை முறையில் அமலுக்கு வர இருப்பதாகவும் சோதனை முறையில் ஏற்படும் பிரச்சனைகளை ஆய்வு செய்து அதன் பின் நிரந்தரமாக அமல் செய்யப்படும் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran