1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
  4. Tiruchendur murugan temple festival

தை உத்திர வருசாபிஷேகம்: திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்..!

Tiruchendur
திருச்செந்தூரில் நாளை தை உத்திர வருசாபிஷேகம்: நடைபெற இருப்பதை அடுத்து பக்தர்கள் ஏராளமானவர் குவிந்துள்ளனர். 
 
திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை தை, உத்தர வருஷாபிஷேகம் நடைபெற உள்ளது. அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு நான்கு முப்பது மணிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு ஐந்து மணிக்கு அபிஷேகம் நடைபெறும் என்றும் 8:00 மணிக்கு முருகர் வள்ளி தெய்வானை ஆவிய விமான கலசங்களுக்கு வருஷாபிஷேகம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனை அடுத்து நாளை நடைபெறும் வருஷாபிஷேகத்திற்கு பக்தர்கள் ஏராளமான வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் நாளை இரவு புஷ்பாஞ்சலி நடைபெற உள்ளதை அடுத்து பக்தர்கள் முடிந்த அளவு மலர்களை கோயில் நிர்வாகத்திடம் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (09-02-2023)!