வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : புதன், 17 ஜூன் 2020 (15:49 IST)

அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் - பிரதமர் மோடி எச்சரிக்கை

நேற்று முன் தினம் இந்திய சீன எல்லையில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேரும் சீனா வீரர்கள் தரப்பில்  சுமார் 35 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகிறது. ஆனால் சீனா இதுவரை அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை.

இந்நிலையில், உயிரிழந்த வீரர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் என பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி கூறியுள்ளதாவது :

எந்த காலத்திலும் பதிலடி கொடுப்பதை நிறுத்த மாட்டோம் ! பலசாலியான இந்தியா மீது அவநம்பிக்கை யாரும் கொள்ள வேண்டாம் ; இந்தியர்களின் வீரத்தின் மீது நம்பிக்கை உள்ளது சரித்திரத்தைப் பார்த்து நமது வீரத்தை தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.