வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : புதன், 17 ஜூன் 2020 (17:21 IST)

மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.3,000 கோடி தேவை - பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை

இந்தியாவில் 5 வது கட்டமாக வரும் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில்  40 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் குணம்பெற்றுள்ளனர். மக்களைக் பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை முழு வீச்சில் எடுத்து வருகிறது.

இந்நிலையில், கொரொனா சிகிச்சைக்காக மருத்துவ உபகரணங்கள் வாங்க ஏற்கனெவே கோரிய ரூ.3000 கோடி தேவை எனவும் மாதம் வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவை தொகையை உடனே விடுவிக்க வேண்டும் எனவும் இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் முதலவர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்துக்கு மறு நிதியுதவி திட்டம் கீழ் ரூ.1000 கோடி வழங்க வேண்டும் எனவும் தற்போது இந்தோ - சீன எல்லையில் நிலவும் பதற்றமான சூல்நிலையில்  தமிழக அரசு மத்திய அரசுக்கு ஆதரவாக இருக்கும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.