1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. EPFO announce application for extra pensions

EPFO-வில் கூடுதல் பென்சன் பெற விண்ணப்பிக்கலாம்! – கடைசி தேதி அறிவிப்பு!

EPFO
EPFO கணக்கில் கூடுதல் பென்சன் பெற விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் கால அவகாசம் மார்ச் 3 வரை மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.

பணியாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு (EPFO) ஊழியர்கள் பெறும் மாத சம்பளத்தில் இருந்து 12 சதவீதம் பிடித்தம் செய்து, அதற்கு நிகரான தொகையை பணியாற்றும் நிறுவனத்திடமிருந்தும் பெற்று வருங்கால வைப்புநிதி கணக்கில் வரவு செய்கிறது. இவ்வாறு வரவு செய்யப்படும் தொகையில் 8.33 சதவீதம் ஓய்வூதிய திட்டத்திற்கும், 3.7 சதவீதம் வைப்பு நிதியாகவும், 0.50 சதவீதம் காப்பீட்டிற்கும் செலுத்தப்படுகிறது.

இந்த வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் பென்சன் பெற அதிகபட்ச சம்பள வரம்பு ரூ.6,500 ஆக இருந்த நிலையில் அதிக ஓய்வூதியம் பெறுவதற்காக சமீபத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி சம்பள வரம்பு ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதிக ஓய்வூதியம் பெற 2014க்கு முன்பு வைப்புநிதி கணக்கில் சேர்ந்தவர்கள் தங்கள் ஊதியத் தொகையில் 8.33% பணியாளர் பங்காககவும், தனியார் நிறுவனங்கள் அதே அளவு தொகையை செலுத்தியும் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 3ம் தேதி வரை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு குறுகிய காலத்திற்குள் விண்ணப்பிப்பது கடினம் என பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

Edit by Prasanth.K
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
நாகாலாந்து கிறிஸ்தவர்கள் பாஜகவை ஆதரிப்பது ஏன்?