மாதவிடாய் விடுப்பால் பெண்களுக்கு வாய்ப்பு குறையும்: உச்சநீதிமன்றம் கருத்து..!
மாதவிடாய் விடுப்பால் பெண்களுக்கான வேலை வாய்ப்பு குறையலாம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்திருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில வாரங்களாக பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டு வருகிறது. ஏற்கனவே கேரளாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பு அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்திலும் ஒரு சில நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வழியாக உள்ளன. மேலும் ஒரு சில நாடுகளில் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு குறித்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை இன்று நடந்த போது பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கினால் வரும் காலத்தில் பெண்களை பணியில் அமர்த்துவதற்கான வாய்ப்புகள் குறையும் என்றும் இந்த வழக்கு கொள்கை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் மத்திய அரசை அணுகலாம் என்றும் தலைமை நீதிபதி சந்திரசூட் கருத்து தெரிவித்துள்ளார்
மற்ற நாடுகளைப் போல் இந்தியாவிலும் மாதவிடாய் விடுப்பு வழங்க வேண்டும் என்ற வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva