வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 27 பிப்ரவரி 2023 (08:13 IST)

இந்த ஆண்டு 10% ஊதிய உயர்வு.. இந்திய ஐடி நிறுவன ஊழியர்களுக்கு நற்செய்தி..!

salary
இந்தியா உள்பட உலகம் முழுவதும் வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்திய ஐடி நிறுவனங்கள் இந்த ஆண்டு தங்களது ஊழியர்களுக்கு 10% ஊதிய உயர்வு அளிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. கூகுள் அமேசான் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களே வேலை நீக்க நடவடிக்கை எடுத்து வருவதால் ஐடி துறையில் பணிபுரியும் ஊழியர்கள் எந்த நேரமும் தாங்கள் வேலையில் இருந்து நீக்கப்படலாம் என்ற அச்சத்துடனே வேலை பார்த்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் தனியார் நிறுவனம் எடுத்த கருத்துக்கணிப்பு ஒன்றில் இந்த ஆண்டு இந்திய ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு சுமார் பத்து சதவீத ஊதிய உயர்வு அளிக்க இருப்பதாக அறிவித்துள்ளது
 
இதனால்  ஐடி துறையில் பணிபுரியும் இந்தியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva