செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 18 ஏப்ரல் 2024 (14:40 IST)

1 ஓட்டு போட்டால் பாஜகவுக்கு 2 ஓட்டு என்பதில் உண்மை இல்லை: தேர்தல் ஆணையம் விளக்கம்.

கேரள மாநிலத்தின் காசர்கோட்டில் நடத்தப்பட்ட மாதிரி வாக்குப்பதிவின் போது பாஜகவுக்கு கூடுதல் வாக்கு பதிவானதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை என உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
 
கண்ட்ரோல் யூனிட்  வாக்குப்பதிவு இயந்திரத்தில் என்ன வாக்கு பதிவாகிறது என்பதை பதிவு செய்து அதனை ஒப்புகைச் சீட்டு இயந்திரத்திற்கு அனுப்பி நகலெடுக்க உத்தரவிடும் என்றும், அந்த நகல் கண்ணாடி வழியாக 7 நொடிகளுக்கு வாக்காளர்களுக்கு தெரிந்த பின் கத்தரிக்கப்பட்டு ஒப்புக்கை சீட்டு இயந்திரத்தில் விழும் என்றும், இதைதொடர்ந்து ஒப்புகைச் சீட்டு இயந்திரம் அனுப்பும் பதிலை மீண்டும்  கண்ட்ரோல் யூனிட் பதிவு செய்து கொள்ளும்  என்றும், இதுதான்  கண்ட்ரோல் யூனிட் செயல்பாடு என்றும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
 
EVM & VVPAT இயந்திரங்கள் தொடர்பான கேள்விகள் வெறும் பயம் மட்டும் தானே தவிர வேறு எதுவும் இல்லை என்றும் உச்ச நீதிமன்றத்தில் தலைமைத் தேர்தல்  ஆணையம் தெரிவித்துள்ளது.
 
 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ‘கண்ட்ரோல் யூனிட் எனப்படும்  மூல இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் தரப்பு விளக்கம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran