வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 17 ஏப்ரல் 2024 (17:44 IST)

ராகுல் காந்தி சொன்னது பாஜகவுக்கு 150.. ஆனால் பிரியங்கா காந்தி சொன்னது எவ்வளவு தெரியுமா?

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இன்று வயநாடு பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்த போது பாஜகவுக்கு வரும் தேர்தலில் 150 தொகுதிகள் தான் கிடைக்கும் என்று தெரிவித்தார். ஆனால் அவரது சகோதரி பிரியங்கா காந்தி ராகுல் காந்தியை விட அதிக தொகுதிகள் பாஜகவுக்கு கிடைக்கும் என்று கூறியுள்ளார். 
 
காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரியங்கா காந்தி கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாததால் இந்த முறை ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது 
 
இந்த நிலையில் இன்று அவர் தேர்தல் பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி பேசியபோது, ‘400 தொகுதிகளை கைப்பற்றுவோம் என்று பாஜகவினர் கூறுவது சாத்தியமில்லாதது என்றும் முன்கூட்டியே ஏதாவது தில்லு முல்லு வேலை செய்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என்றும் அவர் தெரிவித்தார் 
 
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லு முல்லு  ஏதும் நடக்காமல் தேர்தல் நடந்தால் பாஜக 180 தொகுதிகளை கூட தாண்டாது என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் எந்த வளர்ச்சியையும் மோடி அரசில் பார்க்கவில்லை என்றும் மக்களுக்கான தனது தொடர்பை மோடி துண்டித்துவிட்டார் என்றும் அதனால் மக்கள் தான் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 
 
 
Edited by Mahendran