தொடர்புடைய செய்திகள்
- திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் இல்லை - தேர்தல் ஆணையம்
- டும் டும் டும்…நல்ல காலம் பொறக்குது: அமைச்சர் சுப்ரிம் கோர்ட்டில் மனு...
- சட்டசபைக்கு தேர்தல் தேதி அறிவித்த முதல்வர்: தேர்தல் ஆணையம் கண்டனம்
- மக்களவை-சட்டமன்ற தேர்தல் ஒரே நேரத்தில் சாத்தியமில்லை: தலைமைத் தேர்தல் ஆணையர்
- திருவாரூர் தொகுதியும் காலி: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஒரே நாளில் தேர்தல் முடிவு
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ராஜஸ்தான் உட்பட ஐந்து மாநிலங்களின் சட்டசபைப் பதவிக்காலம் விரைவில் முடியவிருப்பதால் அம்மாநிலங்களுக்கான தேர்தல் நடைபெறும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்று இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ஓ பி ராவத் இன்று செய்தியாளர்களை சந்த்தித்து தேதிகளை அறிவித்தார். சதீஸ்கர் மாநிலத்துக்கு இரணடு கட்டமாக நவம்பர் 12-ந்தேதியும் நவமபர் 20-ஆம் தேதியும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார். அந்த மாநிலத்தில் நக்ஸல் அச்சுறுத்தல் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மிசோரம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் நவம்பர் 28-ந்தேதியும் ராஜஸ்தான் மற்றும் தெலங்கானாவில் டிசம்பர் 7-ஆம் தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாநில தேர்தல் முடிவுகளும் டிசம்பர் 11-ந்தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்தல்களில் முதன் முதலாக வாக்காளர்கள் யாருக்கு வாக்கு அளித்திருக்கிறார்கள் என்பதை அறியும் பதிவுச் சீட்டும் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
