புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 6 அக்டோபர் 2018 (17:56 IST)

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் இல்லை - தேர்தல் ஆணையம்

5 மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை.

 
இன்று செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் “சத்தீஸ்கரில் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படும். முதல் கட்ட தேர்தல் நவம்பர் 12ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் 20ம் தேதியும் நடைபெறும். ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலத்திற்கு டிசம்பர் 7ம் தேதி ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படும்.  அதேபோல், மத்தியப்பிரதேசம் மிசோரம் ஆகிய இரு மாநிலங்களிலும் நவம்பர் 28ம் தேதி ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படும்” என தெரிவித்தார்.
 
மேலும், தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய 2 தொகுதிகளில் மழை காரணமாக இடைத்தேர்தல் அறிவிக்க வேண்டாம் என தமிழக தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியிருப்பதால் அங்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை எனவும், அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.