வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 24 செப்டம்பர் 2018 (20:15 IST)

டும் டும் டும்…நல்ல காலம் பொறக்குது: அமைச்சர் சுப்ரிம் கோர்ட்டில் மனு...

காங்கிரஸ் எம்.எல்.ஏ மர்ரி சஷிதர் தெலுங்கானாவில் அதிகபட்ச போலி வாக்காளர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் தவறுகளை நீக்கி முறையான வேட்பாளர் அட்டவணை தயாரிக்க வேண்டும் என்றி தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


தெலுங்கானாவில் மொத்தம்  உள்ள 2.61 கோடி வாக்காளர்களில் 30.13 லட்சம்  வாக்காளர்கள் போலியானவர் என்கிறது இந்த மனு.  மேலும், 20 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் சந்தேகத்தின் படி வாக்காளர் பட்டியலில் இருந்து முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

வேட்புமனு பட்டியலில் முறைகேடு இருப்பதால்தான், உடனடியாக தேர்தலை நடத்த சந்திரசேகர  ராவ் திட்டமிட்டு இருப்பதாகவும், தேர்தல் ஆணையத்திற்கு உரிய அவகாசம் கொடுக்காமல் தேர்தல் நடைபெற இருப்பதால் அது சந்திரசேகரராவுக்கு ஆதரவாக அமையும் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.