1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Eddiyurappa announce night lockdown

ஃப்ரீயா விட்டாதானே நியூ இயர் கொண்டாட்டம்? – எடியூரப்பா அறிவித்த திடீர் ஊரடங்கு!

National
கர்நாடகாவில் ஊரடங்கு கிடையாது என நேற்று வரை சொல்லி வந்த முதல்வர் எடியூரப்பா இன்று திடீர் ஊரடங்கை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனாவிலிருந்து மெல்ல மீண்டு வரும் நிலையில் மீண்டும் ஐரோப்பிய நாடுகளில் தொடங்கியுள்ள வீரியமுள்ள கொரோனா பரவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இங்கிலாந்திலிருந்து வரும் விமான சேவைகள் இந்தியாவில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு நெருங்கி வரும் நிலையில் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மக்கள் இரவினில் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்று கேள்வி எழுந்தபோது ஊரடங்கு அறிவிக்கப்படாது என நேற்று வரை கூறி வந்த முதல்வர் எடியூரப்பா தற்போது திடீர் ஊரடங்கை அறிவித்துள்ளார்.

இன்று முதல் ஜனவரி 2 வரை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவித்துள்ளார். மக்கள் இரவு நேரங்களில் கூடுவதை தவிர்க்க திடீரென அறிவிக்கப்பட்ட இந்த ஊரடங்கால் கர்நாடகா மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
24 மணி நேர கெடு... திமுகவை கதறவிட காத்திருக்கும் பாமக!!