தொடர்புடைய செய்திகள்
- டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
- அருந்ததி ராய் மீது பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு -சீமான் கண்டனம்
- ஆபரேஷன் அஜய் திட்டம்.. இஸ்ரேலில் இருந்து இந்தியர்களுடன் டெல்லி வந்த முதல் விமானம்..!
- 30 நிமிடங்களில் ஒரு ஆம்லேட்டை சாப்பிட்டால் ரூ.1 லட்சம் பரிசு
- WorldCup-2023 : ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி...ரோஹித் சர்மா புதிய சாதனை
முதலமைச்சருக்கு அமலாக்கத்துறை சம்மன்.. நவம்பர் 2ம் தேதி ஆஜராக உத்தரவு..!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புதிய மதுபான கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் இதில் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தது.
அதில் டெல்லியின் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா முறைகேடு செய்திருப்பது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டு சில மாதங்கள் ஆகியும் அவருக்கு உச்சநீதிமன்றம் வரை சென்றும் ஜாமீன் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் துணை முதல்வரை அடுத்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. டெல்லியின் புதிய மதுபானை கொள்கை வழக்கு தொடர்பாக நவம்பர் இரண்டாம் தேதி முதலமைச்சர் அரவிந்த் கெஜரால் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என்று இந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்மனை ஏற்று அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜர் ஆவாரா? அவரும் கைது செய்யப்படுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
