1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Delhi to have lockdown soon

டெல்லியில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்?

டெல்லி
கொரோனா கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வருவது குறித்து டெல்லி அரசு இன்று அலோசனை நடத்துகிறது. 

 
அரியானா, உத்திரபிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து மாநில நிர்வாகம் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. 
 
நாடு முழுவதும் மீண்டும் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் மீண்டுமொரு ஊரடங்கு உத்தரவு போன்ற நடவடிக்கை எடுக்கப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. 
 
இதனைத்தொடர்ந்து டெல்லியில் கொரோனா அதிகரித்து வருவதால், டெல்லியில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வருவது குறித்து டெல்லி அரசு இன்று அலோசனை நடத்துகிறது. 
About Writer
Sugapriya Prakash