1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (15:21 IST)

காஷ்மீர் பைல்ஸ் இயக்குனரின் அடுத்த படத்தின் தமிழ்நாட்டின் உண்மைகள்!

delhi files
காஷ்மீர் பைல்ஸ் இயக்குனரின் அடுத்த படத்தின் தமிழ்நாட்டின் உண்மைகள்!
சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய காஷ்மீர் பைல்ஸ் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கும் அடுத்தபடம் டெல்லி பைல்ஸ்
 
முகலாயர்ஆட்சிக் காலத்தில் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் டெல்லியை எப்படி சிதைத்தார்கள் என்ற உண்மையை இந்த படம் வெளியே கொண்டு வரவுள்ளதாக கூறப்படுகிறது.
 
மேலும் இது வெறும் டெல்லியை மட்டும் அல்ல என்றும் தமிழ்நாடு உள்பட பல இடங்களில் நடந்த உண்மைகளும் இந்த படத்தில் இருக்கும் என இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தெரிவித்துள்ளார் 
 
மேற்கத்திய ஆட்சியாளர்கள் மற்றும் முகலாயர்கள் நம்மை எந்த அளவுக்கு பலவீனமாக்கி உள்ளார்கள் என்பதை தத்ரூபமாக இந்த படத்தில் காட்டப்படும்  என்றும் அவர் தெரிவித்துள்ளார்