1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. cylinder rate rs.100 reduced once more

சிலிண்டர் விலை மேலும் ரூ.100 குறைப்பு.. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்..!

sylinder
சமீபத்தில் மத்திய அமைச்சரவை கூடி 200 ரூபாய் சிலிண்டர் விலை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 100 ரூபாய் குறைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.100 குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ரூ.100 குறைக்கப்படுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த விலை குறைப்புக்கு  ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் வர இருப்பதை அடுத்து சிலிண்டர் விலை குறைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
ஆதிதிராவிடர்களை கோவில் பூசாரிகளாக்குவாரா ஆளுநர்? ஆளுனருக்கு திருமாவளவன் கேள்வி..!