செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 3 அக்டோபர் 2023 (07:20 IST)

500 நாட்களாக மாற்றமில்லாத பெட்ரோல், டீசல் விலை.. இனிமேல் குறையுமா?

Sri Lanka - Petrol
கடந்த 500 நாட்களாக அதாவது கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாறவில்லை என்பது தெரியவந்துள்ளது. 
 
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் 500 நாட்களாக விற்பனை ஆகிவருகிறது 
 
ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102.63 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் டீசல் விலை 94.24 ரூபாய்க்கும் கடந்த 500 நாட்களாக விற்பனையாகி வருகிறது 
 
கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் பெட்ரோல் விலை  ரூ.9.50, டீசல் விலை ரூபாய் 7 மத்திய அரசு குறைத்தது. இதன் பிறகு பெட்ரோல் விலை ஏறவும் இல்லை இறங்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஆனால் தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து பெட்ரோல் டீசல் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
 
Edited by Siva