1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 14 ஜூன் 2024 (16:14 IST)

கிரிக்கெட் சூதாட்டம்..! 15 கோடி பறிமுதல்..! 9-பேர் கைது.!!

Money
மத்திய பிரதேசத்தில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகளில் போலீசார் நடத்திய சோதனையில், ரூ.15 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
 
மத்திய பிரதேசத்தில் கிரிக்கெட் சூதாட்டத்தில் சிலர் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
 
இந்நிலையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகளில் உஜ்ஜயினி போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சூதாட்டத்தில் ஈடுபட முயன்ற 9 பேரை கைது செய்தனர். 

 
இந்த சோதனையின் போது ரூ.14.60 கோடி ரொக்கம், 7 கிலோ வெள்ளி, 7 நாடுகளின் கரன்சிகள், 10 மொபைல் போன்கள், 7 மடிக்கணினிகள், சிம்கார்டுகள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சூதாட்டத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி பியூஷ் சோப்ராவை போலீசார் தேடி வருகின்றனர்.