1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 10 ஜூன் 2024 (10:10 IST)

மீண்டும் பாஜக ஆட்சி.. கொண்டாட்டத்தில் பற்றி எரிந்த பாஜக அலுவலகம்!

BJP Office Fire
பாஜக மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த நிலையில் அதை கொண்டாடிய போது பாஜக அலுவலகம் பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



நேற்று மூன்றாவது முறையாக மக்களவை தேர்தலில் வென்ற பாஜக கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தது. இதன்மூலம் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி தேர்வாகி பதவி பிரமாணம் செய்து கொண்டார். அவருடன் அமித்ஷா, குமாராசாமி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலரும் அமைச்சர்களாக பதவி பிரமாணம் செய்துக் கொண்டனர்.

பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதை இந்தியா முழுவதும் உள்ள பாஜக அலுவலகங்களில் பலர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள். அந்த வகையில் மத்திய பிரதேசத்தில் உள்ள பாஜக அலுவலகத்திலும் பட்டாசு வெடித்துக் கொண்டாடியபோது திடீரென தீப்பற்றியது. பாஜக அலுவலகம் தீப்பற்றி எரிந்த நிலையில் உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

Edit by Prasanth.K