வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 27 மே 2024 (21:12 IST)

காதலிக்கு இறுதிச்சடங்கு செய்ய காசில்லை.. பிணத்தை சாலையில் போட்டு சென்ற லிவ்-இன் காதலன்!

Death
மத்திய பிரதேசத்தில் இறந்து போன காதலிக்கு இறுதிச்சடங்கு செய்ய காசில்லாததால் அவரது பிணத்தை காதலன் நடுரோட்டில் விட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



மத்திய பிரதேசத்தின் இந்தூர் பகுதியில் 57 வயது பெண் ஒருவர் குடும்பம் இன்றி தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இவருடன் 53 வயது ஆண் நண்பர் லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக இவர்கள் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் அந்த பெண்மணி உடல்நல குறைவால் இறந்து விட்டார்.

ஆனால் அவருக்கு இறுதிச்சடங்குகள் செய்ய அந்த ஆண் நண்பரிடம் பணம் இல்லாததால் பலரிடம் உதவி கேட்டு வந்துள்ளார். இதனால் 3 நாட்களாக பெண்மணியின் பிணம் அந்த வீட்டிலேயே கிடந்துள்ளது. அதனால் துர்நாற்றம் வீசுவதாக அக்கம்ப்பக்கத்தினர் கூறியுள்ளனர்.


இதனால் அந்த நபர் அந்த பெண்ணின் உடலை ஒரு சாக்குப்பையில் கட்டி வைத்துள்ளார். இறுதி சடங்கிற்கு பணம் கிடைக்காததால் விரக்தியடைந்த அவர் சாக்கை அப்படியே சாலையில் விட்டு சென்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

அதில் அந்த பெண் இயற்கையாகவே இறந்ததாக தெரிய வந்துள்ளது. அதையடுத்து போலீஸாரே அந்த பெண்மணிக்கு இறுதி சடங்குகளை நடத்தியுள்ளனர். அந்த பெண்ணின் காதலர் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K