1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 1 ஜூன் 2024 (14:16 IST)

100 கிலோ லட்டு ஆர்டர் கொடுத்தது காங்கிரஸ்.. வெற்றி மீது அவ்வளவு நம்பிக்கையா?

laddu
ஏழு கட்ட பாராளுமன்ற தேர்தல் இன்றுடன் நிறைவு பெறுவதை அடுத்து ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் தேர்தல் முடிவை அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 
 
இந்த நிலையில் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் அந்த கட்சியினர் 100 கிலோ லட்டு ஆர்டர் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
 
மத்திய பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜித்தேந்திர பட்வாரி என்பவர் 100 கிலோ லட்டுக்கு ஆர்டர் கொடுத்திருப்பதாகவும் கண்டிப்பாக காங்கிரஸ் கட்சி மத்திய பிரதேசம் மாநிலத்தில் மிகப்பெரிய வெற்றியை அடையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார் 
 
இந்த முறை பாஜகவால் வெற்றியை கொண்டாட முடியாது என்றும் காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு தொண்டர்களும் மக்கள் நலனுக்காக உழைத்திருக்கிறார்கள் என்றும் எனவே கண்டிப்பாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 
மேலும் மத்திய பிரதேசம் மாநிலத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும் மக்கள் அரசை மாற்றும் முடிவை எடுத்து விட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்
 
Edited by Mahendran