திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 2 மே 2023 (11:25 IST)

3000ஆக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு.. மத்திய சுகாதாரத்துறை தகவல்..!

இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தினசரி பாதிப்பு 10,000 என இருந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைந்து 3000 என குறைந்து உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 
 
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3325 என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் கொரானா பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கொரோனா பாதிப்பில் இருந்து 6379 பேர் குணமாகி உள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
 
இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 44,175 என குறைந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 
 
Edited by Siva